எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Jan 26, 2011


இந்த 62- வது   குடியரசு தினத்தினை நாம் கொண்டாடா விட்டாலும் நம்மை ஆளும் வர்க்கமும் அவர்களின் ஊதுகுழலான  ஊடகங்களும்  கொண்டாடும் வேலையில் அதை முன்னிட்டு நமது தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25ம்  நாளை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த ஆறு மாத காலமாகவே தேர்தல் ஆணையம் "கண்ணியமான தேர்தல்" ,” ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது எப்படி", "வன்முறை அற்ற தேர்தல்களை நடத்துவது நமது கடமை" ,” ஓட்டப்பளிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு" என்று அரசு சார அமைப்புகளோடு இணைந்து கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. அத்தோடு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக நேர்மையான ஆணையர்களை நியமித்து தேர்தல் குறித்து ஒரு நல்ல கண்ணோட்டத்தை கொண்டு வர அயராது பல நிகழ்சிகளை நடத்தி உள்ளது. அதன் இறுதி வடிவமாக ஜனவரி 25 வது நாளை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து உள்ளது. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. னால் இது போல வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம்  எந்த பிரச்சாரத்தையும் செய்ததில்லை,  முதன் முதலில் ஏன் இவ்வாறு தேர்தல் ஆணையம் செய்கின்றது என்றால் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தி இந்தியாவின் புகழை நிலை நாட்ட வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம்.