எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Nov 13, 2011

தெருவெங்கும் வெள்ளம்! எங்கே மக்கள் அரசு?


வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டு நாள் மழை பிடித்தாலே நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. வேளச்சேரி போன்ற பகுதிகளில் படகுப் பயணம் செய்யுமளவிற்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகனபோக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய் விடுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால்களும், பாதாளச் சாக்கடைகளும் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
பல ஏரிகளும் குளங்களும், கால்வாய்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை. அப்படி பராமரிக்க ஒதுக்கப்படும் தொகையானது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்தகாரர்களால் கூட்டு பிரித்து கொள்ளையடிக்கப்படுகிறது. நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன‌. அதைத் தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை. நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகின்றனர். 

Nov 12, 2011

வாச்சாத்தி - அதிகார வர்க்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்


வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்நாடக - தமிழக கூட்டு அதிரடிப்படையும், வனத்துறையும் சேர்ந்து மலை வாழ் கிரமா மக்களுக்கு இளைத்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வீரப்பன் பெயரை சொல்லிக்கொண்டு வனத்துறையினரே  சந்தனமரங்களை வெட்டி கடத்திக்கொண்டுருந்தனர்.அதற்கு அதிரடிப்படையும், வருவாய் அலுவலர்களும் துணைபோனார்கள்.

பெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளுக்கே!


இன்று (16.09.2011) பெட்ரோல் விலை உயர்வை ( தனியார் கம்பனி நிர்ணயம் செய்ததை) அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு சாதாரண மக்களுக்கு பேருடியாக அவர்களின் பட்ஜெட்டில் இறங்கியுள்ளது. தனியார் கார், பைக் கம்பனிகள்  அது துவங்குவதில் இருந்து குறைந்த விலையில்  நிலம், கச்சா பொருள் , குறைந்த கூலி, இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் மீறும் அதிகாரம், போலிஷ் பாதுகாப்பு, குறைந்த வட்டிக்கு லோன் ஆகிய அனைத்து சலுகைகளையும் வாரி வழங்குகிறது அரசு . 1  லட்சத்திற்கு கார் என அறிவித்து அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் தள்ளாடுகிறது. தவணை முறையில் கடன் கொடுத்து கண்ணுக்கு தெரியாமல் அதிக வட்டியை பைனான்ஸ் கம்பனிகள் பிடுங்குகின்றன. அரசும் பொது போக்குவரத்தை தன்னால் முடிந்த மட்டும் குறைத்து வருகிறது, கட்டணங்களை மறைமுகமாக ஏற்றி வருகிறது. 

ஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டும்

உலகிலையே அதிகம் ஊழல் செய்யும் நமது அரசியல்வாதிகளுக்கு, மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு ஒய் , இசட் , இசட் பிளஸ் பாதுகாப்பும் ,பற்றாக்குறைக்கு கருப்பு பூனைப்படை , குண்டு துளைக்காத வாகனகங்கள் ,தனி விமானங்கள்  என்று அவர்கள் ஊழல் செய்வதற்கு அனைத்து பாதுகாப்பையும் இந்த அரசுகள் செய்து கொடுக்கின்றன.அப்படியே ஊழல் , கொலை , நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைதானால்  கூட ஜெயிலிலும்  சொகுசு வாழ்க்கை , பாதுகாப்பு வளையங்கள் சூழவே வளம் வருகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணம் ,அதிகாரம் படைத்தவர்கள், சூழ்ச்சிகாரர்கள், காரியவாதிகள், சுரண்டல்வாதிகள். முதலாளிகள் , முதலாளிகளின் அடிவருடிகள்.