எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Sep 16, 2010

கல்வியை கடை சரக்காகவும், சரக்கை அரசே நடத்தும் அவலம்


தமிழக அரசு கல்வியை கடை சரக்காகவும் , டாஸ்மாக்கை தனது கைகளிலும் வைத்திருக்கும் போதே நமக்கு ஓன்று நன்றாக புரிந்து போயிருக்கும் அரசு இலவச திட்டங்களை அறிவித்து தனது வாக்கு வங்கியை தக்க வைத்து கொள்ளும் நோக்கமே அல்லாமல் நமது வருகால சந்ததியினர் கல்வி கற்று அவர்கள் வாழ்க்கை சிறப்புற விளங்க வேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை என்பது . ஆனால் மக்களின் பல போராட்டங்களின் பயனாக வந்த நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் உத்தரவு வராது வந்த மாமணியாக தனியார் கல்வி நிறுவனகளுக்கு கிடுக்கு பிடி போட்டது. உச்ச நீதிமன்றம் வரை போராடி கல்வி நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இப்போது சட்டத்தின் ஓட்டைகளை கண்டு பிடித்து கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மீண்டும் தடை ஆணை பெற்று விட்டன இனி அவர்கள் விருப்பத்த்திர்கேற்றவாறு கல்வி கொள்ளை அடிப்பது தொடரும் இதற்கெல்லாம் தீர்வு தரும் வகையில் அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வந்து மக்கள் படும் துன்பத்திற்கு விடுதலை அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு இல்லை என்றால் இதே அரசு தான் ஒட்டு கேட்டு மக்கள் முன்பு நிற்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.