எனது பக்கங்கள்


இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.Oct 11, 2010

ஞயிற்று கிழமை புரட்சியாளர்கள் - யாருக்கு பயன் ?

சிலர் எழுத்திலும், பேச்சிலும் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்று நினைத்து கொண்டு செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். இவர்கள் இந்த நாட்டில் முதலாளித்துவம் உருவாக்கி உள்ள அனைத்து விதமான கலாசார சேறுகளிலும் உருண்டு பிரண்டு கொண்டு  இந்த சமூகத்தை  மாற்றி விடமுடியும் என்று வீணாக புலம்பி கொண்டு திரியும் இவர்களால் இந்த சமூகத்தின் உதிர்ந்து விலப் போகும்  நகத்தை கூட அசைக்க முடியாது என்பது தான் உண்மை. அனைத்து மக்களிடமும் பரஸ்பரம் புரிதல் , நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்காமல் நாம் இவற்றை சாதிக்க முடியாது. பாகத் சிங்  போன்றவர்களிடம் இருக்கும் தியாக உணர்ச்சியானது இன்று நம் யாரிடமும் இல்லை என்பதுவே உண்மை ஆகும்.