எனது பக்கங்கள்


இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.Oct 15, 2010

அரிமா அரிமா இந்த தமிழன் பாவம் அரிமா

பட்டுக்கோட்டை கல்யாண  சுந்தரம் , மருதகாசி போன்ற தமிழ்  கவிஞர்கள் மக்களுக்காக பாடினார்கள், இந்த சமூகம் நல்ல பாதையில் நடைபயில வேண்டும், என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏழை மக்களுக்கும் புரியும் வகையில் மெட்டமைத்து அவர்கள் படும் துன்பங்களை எடுத்துரைத்தனர். இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர்கள் குரல் திரைவானில் ஒலித்தது.