எனது பக்கங்கள்


இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.Sep 9, 2010

அப்போது மிகுந்திருந்த இப்போது மலிந்த போன தமிழ் திரைபட பாடல்களில் முற்ப்போக்கு சிந்தனை

சுதந்திர போராட்டமும் தமிழ் சினிமாவும்

தமிழ் திரை பட உலகம் துவக்கம் என்பது சுதந்திர போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போதிருந்தே துவங்கி விட்டது எனலாம். பொதுவாகவே திரைபடங்கள் நாடகங்களில் இருந்தே வளர்ந்து வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதை போலவே தமிழ் திரைபட உலகிலும் நாடக கலைஞர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது என்று சொல்லலாம். பல புகழ் பெற்ற நாடக கலைஞர்களும் திரையில் தோன்றினர். அப்போது புராண நாடகங்கள் மட்டுமே அல்லாமல் சுதந்திர உணர்வை தூண்டக்கூடிய பல நாடங்கள் நடந்தன. அந்த நாடக கலைஞர்களில் பலர் சுதந்திர போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள் பலர் இருந்தனர் இது கலை துறையினருக்கு இயல்பான ஒன்றாக இருந்தது. ‘தியாக பூமி’ போன்ற படங்கள் முழுக்க முழுக்க சுதந்திர உணர்வை மக்களுக்கு ஊட்டுவனவாகவே இருந்தன. அதனால் தான் வெள்ளையர்கள் அரசாங்கம் நாடகத்திற்கும் தணிக்கை முறையை கொண்டு வந்தது அனால் இன்றும் அந்த தணிக்கை தொடர்வது என்பது வெள்ளையர்களுக்கும் ,இப்போது உள்ள கொள்ளையர்கள் அரசுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அந்த காலங்களில் நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே வெள்ளை அரசாங்கத்திற்கு எதிராக நாடகம் நடத்தியதர்க்காக அந்த ராஜா வேஷத்தோடு கைதான பல நாடக கலைஞர்கள் இருந்தனர். அது இயல்பான ஒன்றாகவும் அப்போதைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் எளிதில் சுதந்திர உணர்வை ஊட்டுவனவாகவும் இருந்தது. அவ்வாறு கொடும் அடக்குமுறைகளை எதிர்த்து பாடுவது என்பது அந்த கலைஞர்கள் தங்களின் கடமை என்று கருதினர். அவர்களால் முடிந்த அளவிற்கு நாட்டின் சுதந்திரத்திர்க்கான பங்களிப்பை அவர்கள் ஆற்றினர். அத்தோடு பாரதியாரின் தடை செய்யப்பட்ட நூல்களை பதிப்பித்து வெளியிட்டனர் அந்த பாடல்களை மேடைகளிலும் பாடினர். இவ்வாறு தமிழகமெங்கும் சுதந்திர உணர்வு நிரம்பி ததும்பிய பொற்காலம் என்று சொல்லலாம்.