எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Sep 19, 2010

7 செப்டம்பர் பொது வேலை நிறுத்தம் வெற்றியும், அது முன் நிறுத்தும் பாட்டாளி வர்க்க கடமையும்

அப்பட்டமாக மறுக்கப்படும் தொழிலாளர்கள் உரிமைகள்
.என்.டி.யு.சி. , ..டி.யு.சி., எஸ்.எம்.எஸ்., சி..டி.யு., ..யு.டி.யு.சி.,  டி.யு.சி.சி. ஆகிய அனைத்து சங்கங்களும்  இணைந்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளன. விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் , உணவு பண விக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்டங்கள் அப்பட்டமாக மீரப்படுவது ,லாபம் தரும் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது , ஆட்குறைப்பு , வேலைநீக்கங்கள், வேலையிழப்பு , ஒப்பந்த தொழிலார் முறை இவ்வாறு தொடர்ந்து செய்து வரும்  தொழிலாளர் விரோத போக்கை கை விடவேண்டும் என்றும்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது
பொதுவாக மற்ற கட்சிகள் பிரசாரம் செய்யும் போது இது மக்கள் நல அரசு, விவசாயிகள் நலம் விரும்பும் அரசு, மீனவர் நலம் விரும்பும் அரசு,தொழிலாளர் உரிமை காக்கும் அரசு என்று பிரசாரம் மேற்கொள்வார்கள் ஆனால் அடிப்படையில் மீனவராகட்டும், விவசாயிகள் ஆகட்டும் ,நேசவாளியாகட்டும்  எந்த பிரிவாக   இருந்தாலுமே ஓன்று சுரண்டும் வர்க்கமாகவும் மற்றொன்று சுரண்டபடக்கூடிய  வர்க்கமாகவுமே இருக்கும், அது தான் உலக உண்மை. தொழிற்சங்கங்கள் தான் வர்க்கபோரட்டத்தின் அணிதிரண்டு நிற்கும் முதல் படை பிரிவு  ஆகும். உணர்வு பெற்ற தொழிலாளிகளுக்கு தங்கள் ஒற்றுமையை தவிர தங்களை காக்கும் கருவி வேறு எதுவும் இல்லை என்பது தெரியும். தொழில் நிறுவனங்களில் ஒரு தொழிலாளி இயந்திர கோளாறு விபத்து  மூலம் இறந்து போனால் அதை மூடி மறைக்க அரசும், அரசு இயந்திரமும்  தொழிலாளிகளுக்கு எதிராக செயல் படுவதும் அதே சமயம் ஒரு ஆலையில் சட்டபூர்வமாக வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு எதிராக காவல் துறை துப்பாக்கி  சூடு நடத்துவதும் வெளிப்படையானது. ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பின் மூலம் தான் ஒரு தொழில் அதிபர் அதிக லாபம் ஈட்ட முடிகிறது. ஆகவே தொழிலாளர்கள் சுரண்டப்படுவதும் , அதிக லாப வெறி நோக்கோடு செயல்பட்டு நுகர்வோரையும் சுரண்டி கொளுத்து கொண்டிருக்கின்றனர் இன்றைய தொழில் முதலாளிகள். ஆகவே தான் ஒரு ஒழுங்கமைந்த தொழிலாளர் ஒற்றுமை என்பது இயற்கையாகவே வருகிறது.   “பயிறு விளைஞ்சால் என்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்” என்ற பாடலை போல தான் இன்று உடம்பில் சக்தி இருக்கும் வரையில் உழைத்து கொண்டே இருக்கின்றனர் நமது தோழர்கள். ன்று போரடி பெற்ற 8 மணி நேரம் என்ற வரையறை எல்லாம் காற்றிலே பொய் விட்டது 12 மணி என்பது தொழில் நிறுவனங்களில் இப்போது எழுதாத சட்டமாக ஆக்கப்பட்டு விட்டது. இந்த பாவப்பட்ட தொழிலாளர்கள் எங்கோ ரசியவிலோசீனாவிலோ  இல்லை இங்கே அம்பத்துரிலும் ,திருப்புரிலும், மதுரையிலும் , சிவகாசியிலும் குட்டி கிராமமான  குப்பாயி வலசிளும் இருக்கின்றனர். அவர்கள்  சிலர்  பெரிய  நிறுவனக்களில்  வேலை   செய்பவர்களாகவும்   அமைப்பு  சார்ந்தவர்களாகவும் , சிலர் தேனீர் கடையில் வேலை செய்வது சிறு சிறு கடைகளில்  வேலை செய்வதுமாகவும் கட்டட வேலை செய்வதுமாக அமைப்பு சாராதவர்கலாகவும்  இருக்கின்றனர் மொத்தத்தில் தங்களது உழைப்பை விற்றால் தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையில்  உள்ள அனைவருமே தொழிலாளர்களே. அப்படி என்றால் 80 சதவிதத்திர்க்கு மேற்பட்டவர்கள் உழைக்கும் தொழிலாளி வர்க்கமே அவர் பல்வேறு இடங்களில் வேலை செய்தாலுமே கூட. மீதம் உள்ள 20 சதவிகிதத்தினர் மூலதனமான பணத்தை அதிகமாக வைத்திருக்க கூடிய முதலாளி வர்க்கம் இது இந்த 80 சதவிகித தொழிலாளி வர்க்கத்தை சுரண்டி கொளுத்து கொண்டிருக்கும் முதலாளி வர்க்கம்.

இந்திய முதலாளி வர்க்க ஆட்சி

இந்த ஆட்சியாளர்கள் அனைவருமே முதலாளி வர்க்கத்திற்காக சேவை செய்து அதன் மூலம் சுபிட்சமாக வாழும் சுரண்டல் கூட்டம் தான் இன்று மன்மோகன் சிங், அத்வானி முதல்  ஜெயலலிதா,கருணாநிதி வரையிலான  கூட்டம் ஆகும். இந்த கூட்டம் எழைகளின் பங்காளன் என்று சொல்லிக்கொண்டு அவர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையை தான் திறப்பட்ட செய்து வருகிறது. இன்று விலைவாசி வாணை  முட்டி நிற்கிறது. உணவு பொருள்கள் வீனாக போனாலும் பரவாயில்லை  ஆனாலும் ஏழை மக்களுக்கு கொடுக்க முடியாது என்று இருமாத்து இருக்கும் அரசு தான் நமது அரசு. அந்த அரசுக்கு இந்த அப்பாவிகளின் ஓட்டை வாங்கும் தந்திரமும்  அவர்கள் ஓன்று சேர முடியாதபடி அவர்களிடையே மதம்,சாதி என்று துண்டாடும் கைவண்ணம் தெரிந்து வைத்திருக்கிறது. அந்த உண்மையை உழைக்கும் வர்க்கமாக இருக்கும் நாம் புரிந்து கொள்ள வில்லை என்றால் நமக்கு இந்த கொடுமைகளில் இருந்து விடுதலை கிடைக்காது. இன்று ரேசன் அரிசி மட்டும் இல்லை என்றால் பலர் உயிர் வாழவே இங்கு இயலாது என்பது தான் நிதர்சன உண்மை. இந்த கொடு சுரண்டல் தான் உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து துன்பத்திற்கும் காரணம். முதலாளிகளின் கைப்பாவையாக இருக்கும் அரசுடன் ஏழையின் குரல் அம்பலம் ஏறவேண்டுமானால் நாம் உரத்து கூற நமது குரல்கள் ஓன்று பட்டு இந்த மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாத இந்த அரசை காது செவிடாகும் படி கூவினால் தான் அவர்களுக்கு இந்த ஏழைகளின் வலியை புரிய வைக்க முடியும். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தொழிற்சங்கங்கள்  உண்டு அதுவும் பல கட்சி சார்த்த பல சங்கங்கள் உண்டு. அவர்களின் கூலி உயர்வு, மற்றும் இன்ன பிற பொருளாதார கோரிக்கைகளுக்கு வேண்டுமானால் அவர்களால் குரல் கொடுக்க முடியுமே தவிர இந்த அரசுக்கு எதிராக, தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தாத இந்த அரசை கண்டித்தோ அவர்களால் குரல் எழுப்ப வேண்டுமானால் அவர்களுக்காக தேசிய அளவில் ஒருகிணைப்பு அவசியம் தேவை அந்த  ஒருகிணைப்பு இங்கு பல தொழில் சங்கங்களாக வளர்ந்து நிற்கிறது.

பாட்டாளி வர்க்கம் வெல்லட்டும்
இந்தியாவில் துரதிஷ்ட வசமாக பொதுவுடைமை கட்சிகள் ட்டுமே 100 க்கு மேலாக இருக்கின்றன. அவை ஓவ்வொன்றும் இந்த நாட்டின் வரையறையாக பல் வேறுபட்ட கருத்தை முன்வைக்கின்றன . அனால் அவர்கள் அனைவரும் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் கருத்தாக இருப்பது இந்த அரசு இந்திய தேசிய முதலாளிகளின் கைகளில் இருக்கிறது,  இந்த முதலாளித்துவ அரசின் நேர் எதிர் வர்க்கமாக இருக்கும் தொழிலாளி வர்க்க அரசியல் தான் உண்மையான உழைக்கும் வர்க்க அரசியலாக இருக்கும். அந்த அடிபடையில்  ஆளும் முதலாளி வர்க்க அரசியலுக்கு எதிராக நாம் முன்னிறுத்துவது சோஷலிச புரட்சியை தான் அதற்க்கு கட்டியம் கூறுவதாகவே இன்று இந்த தொழிலாளி வர்க்கங்கள் கட்சி பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செப்டம்பர்லில் ஒரு மாபெரும் வேலை நிறுத்தத்தை நிகழ்த்தி காட்டி உள்ளன. இது இனி வரபோகும் சோசலிச புரட்சிக்கு முன்னோட்டமாக எடுத்துக்கொண்டு ஒரு வலிமையான பாட்டாளி வர்க்க கட்சியை கட்டியமைக்க வேண்டும். அது காலம் நம் முன் நிறுத்தும் மாபெரும் கடமை ஆகும். தொழிலாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக! புரட்சி நீடுழி வாழ்க!  




No comments:

Post a Comment