எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Mar 20, 2011

சேகுவேராவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ மரணம் உழைக்கும் வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு


உலகின் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்கமுடியாத ஆத்திரத்தால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!” என்று முழங்கிய    மாபெரும் போராளி எர்னஸ்ட் சேகுவேரா. கம்யூனிச சிந்தனையும் மனிதாபிமானமும் நிரம்பிய குடும்பத்தில் பிறத்தவர் சே .இவர்  1948 ஆம் ஆண்டில்  மருத்துவம் படிப்பதற்காக , புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு , அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன்  சேர்ந்து கொண்டு, மோட்டார்  சைக்கிளில்  தென்னமெரிக்கா  முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர்  குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் சைக்கில் நாட்குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, அறியாமை என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சேகுவேரா பலமாக நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற  ஹிஸ்பானிய அமெரிக்க  உருவாக வேண்டும் என்பது சேகுவேராவின் லட்சியமாயிற்று . இந்த பயணம் தான் சேகுவாரவை மாபெரும் புரட்சியாளனாக ஆக்கியது. இந்த பயணத்தின் போது உற்ற தோழனாக பயணித்தவர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ .
இவர் சே மீது எந்த அளவிற்கு அன்பு செலுத்தினார் என்றால் பயணத்தின் போது சேவின் பிறந்த நாளை  கொண்டாட  அனைவரும்  தயாராகிறார்கள்  ( ஜூன் 13 )  அன்று அமேசன் நதியின் மறுகரையில் இருக்கும் தொழுநோயாளிகளோடு தனது பிறந்த நாளை கொண்டாடப் போகிறேன், என்று நதியில் குதித்து நீந்தத் தொடங்குகிறார், அவர் கடுமையாக ஆஸ்துமா வின்  பாதிப்பு உள்ளவர் , அமேசான் நதியோ  மிகபெரியது என்ன செய்வது, அவருக்கு என்ன நேருமோ  என்று தெரியாமல் கண்ணீர் விட்டு கதறுகிறார் கிரேனாடோ,சே நீந்தி கலைத்து போய் மறுகரையில் எழுகிறார், தொழு நோயாளிகளும்  அவரை அன்போடு முகாமிற்கு தூக்கி செல்கின்றனர். அந்த உன்னதமான நண்பர்களின் பயணத்தின் போது இந்த மனித குலத்தின் மீது அளவற்ற அன்பு பெருக்கிறது, ஒரு சிலர் நலமாக வாழ லட்சகணக்கான மக்களை துன்பக்கடலில் ஆழ்த்தும் முதலாளித்தவத்தின் மீதும் ,ஏகாதிபத்திய அமெரிக்காவின் மீதும் , அதற்கு துணைபோகும் லத்தின் அமெரிக்க ஆட்சியாளர்கள் மீதும் பெரும்கொபம் கொள்கின்றனர் இருவரும் மக்களின் அறியாமையை நினைத்து பச்சாதப்படுகின்றனர்.இவை அனைத்துமே மார்க்சிய இலக்கியங்கள் மீதும் கம்யூனிசத்தின் மீதும் அவர்களுக்கு எல்லையையற்ற காதலை உருவாக்குகிறது. பயணத்தின் முடிவில் நண்பர்கள் பிரிய நேர்கிறது.
 சேகுவேர ,பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்து  கொரில்லா யுத்தத்தின் மூலம்  மக்கள் விரோத  சர்வாதிகாரியாக இருந்த படிஸ்டாவின் அரசை தூக்கி எரிகின்றனர். கியூபாவில் புரட்சி வீரர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புதிய உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சி மலர்கிறது.  1960  சே தனது நண்பரை கியூபாவிற்க்கு வர அழைப்பு விடுக்கிறார்.  நண்பனின் அழைப்பை ஏற்று கியூபா வந்த ஆல்பர்ட்டோ கிரெனாடோ ஹவானா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியமர்கிறார், பின்பு பல றிவியல் கருத்தரங்குகளில் கலந்து  கொள்வதோடு கியூபாவை  மருத்துவ, கல்வி , அறிவியல் துறைகளின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றினார். சே வின் மறைவிற்கு பின்னரும் தனது உயிர் நண்பனின் நினைவாக அவர் மறையும் வரை கியூபாவிலையே தங்கி இருந்தார். தி மோட்டார் சைக்கில் டைரி என்ற திரைப்படம் வெற்றிப்படமாக அமைவதற்கு இவரின் பங்களிப்பு மிகவும் அதிகம் என்று கூறலாம். இவரது பயணக்குறிப்பில் சே என்ற மாபெரும் மனிதாபிமாணியை  நாம் அருகில் இருந்து பார்க்க முடியும். இவர்   05.03.2011  அன்று தனது 88  வது வயதில் மரணத்தை தழுவினார். இவரை பார்க்கும் போதெலாம் சே எனும் மாபெரும் புரட்சியாளனை நாம் தரிசித்திருக்கிறோம். இவரின் இழப்பு அறிவியல் வளர்ச்சிக்கும், உழைக்கும் வர்கத்தினருக்கும் மிகப்பெரிய இழப்பேயாகும். சேவையும் அவரது நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோவையும் நினைவு கூறுவோம், அவர்களின் வழியில் சோஷலிச சமுதாயத்தை அமைக்கப்பாடுபடுவோம்.

 தொடர்பிற்கு:
   9843464246
advkathiresan@gmail.com

No comments:

Post a Comment