எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Sep 20, 2010

திரு.ஞானிக்கு 'ஒ போடுவோம்'

பல காலமாக ஒற்றை ஆளாக துனிச்சலோடு அரசியல் வாதிகளின் போலி முகத்திரையை கிழித்து வரும் 'வாழும் பாரதி'யாக தான் இன்று திரு .ஞானி நமக்கு தெரிகிறார். இவருடைய 'ஒ பக்கங்கள்' பல பத்திரிக்கைகளில் தொடர்ந்து வெளி வருவது என்பது எங்கும் நடக்காத அதிசியம் தான். இவரை போன்ற அரசியல் விமர்சகர்கள் இருக்கும் சமூகம் நல்ல நீரோட்டம் உள்ள சமூகமாக தான்  இருக்கும்.  தன் மனதில் தோன்றியதை  தெளிவாக தையிரமாக எடுத்து வைக்கும் இவரை நாம் வழிகாட்டியாக எடுத்து கொள்ள வேண்டும். 


காஷ்மீர் நெருப்பு மன்மோகன் மீது தாவுகிறது

காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு என்ன தான் மூடி மூடி வைத்தாலும் தீ பிடித்து எரியும் வைக்கோல் போரில் கம்பளியை போட்டு அணைப்பது போல தான் முடியும் அந்த வைக்கோல் போர் எரிவதொடு கம்பளியும் ஏறிந்து அதை அனைப்பவனையும் எறிக்கதான் போகிறது காஷ்மீரில் பற்றியுள்ள சுதந்திர தாகம் என்னும் அழியாத நெருப்பு. இலங்கை தமிழர்களின் துயரங்களை பேசும் நாம் முதலில் காஷ்மீர் மக்களின் சுதந்திர போராட்டங்களை பற்றியும் பேச வேண்டும்.
காஷ்மீர் சுதந்திர போராட்டத்தை ஆதரிக்காதவர்கள் கூட இன்று அந்த மக்கள் படும் துன்பங்களை பற்றியும் அங்கு சுட்டு கொள்ளப்படும் குழந்தைகள், பெண்கள் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர். இது இந்திய முதலாளிகளுக்கு சப்பை கட்டு கட்டும் இந்த ஊடக உலகம் மூடி - மூடி வைத்தாலும் வெளியே உண்மைகள் தெரிய தான் செய்கிறது