எனது பக்கங்கள்


இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.Oct 14, 2010

கோபம், போட்டி, வெறி , பழிவாங்கும் உணர்ச்சி இவை இன்றைய அடிபடை தேவை

ஒரு சிலர் சொல்வது போல சாந்த குணம் கொண்டு மென்மையான வாழ்க்கை நடத்துவது என்பது இன்றைய சூழலில் இயலாத காரியம்.  டார்வின் தத்துவம் போல  சூழ்நிலைக்கு ஏற்ப வாழாத எந்த உயிரும் இந்த பூமியில் வாழ்வதற்கான தகுதியை இழந்து போய் விடும் . இன்று ஊழல் , லஞ்சம் ,நம்பிக்கை துரோகம் என்று பல தீய சக்திகள் போலிஷ், ராணுவ  துணையோடு  கம்பீரமாக  அப்பட்டமாக அநியாயங்களை நிகழ்த்தி கொண்டு உள்ளன.  இது போன்ற வெளிப்டையான அநீதிகளை அடிப்படையாக கொண்ட இந்த சமூகம் அநீதிகள் அற்ற சமூகமாக மாற்றப்பட்ட வேண்டும் என்றால் இந்த சமூகத்தில் சராசரியாக வாழும் நாம் விண்ணை தொடும் விலைவாசி , கல்விகூடங் களில் நிகழும் பகல் கொள்ளைஊழல், ரவுடிகள் துணையோடு ஆளும் இந்த அரசாங்கம் இவை எல்லாம் நீங்கள் மென்மையானவராக இருந்தால் உங்களை துக்கி சாப்பிட்டு விட்டு மென்று துப்பி விடுவார்கள் .