எனது பக்கங்கள்


இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.Dec 18, 2011

ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம், தொடர் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்!


இன்று அரசு இயந்திரம் முழுவதும் ஊழல் சேரில் முழுவதுமாக சிக்கி கிடக்கிறது. இந்தியாவில்  முதல் அமைச்சர்கள் , மந்திரிகள் , எம்.எல்.ஏ.கள் , எம்.பி.கள் ஆகிய அனைத்து பதவிகளில் இருப்பவர்களும் ஊழலில் ஊற்றுக்கண்களாக இருக்கிறார்கள். ஆயிரம் , பத்தாயிரம் ,லட்சம் என்பதெல்லாம் தாண்டி 1 லட்சம் கோடி என்ற அளவிற்கு இன்று அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். நாட்டின் இயற்கை வளங்களை தங்கள் இஷ்டத்திற்கு சூறையாடுகின்றனர்.இவ்வாறு நாட்டின் சாதரண மக்களுக்கு சேரவேண்டிய அரசின் நலத்திட்டத்தின் பயன்கள் உரியவர்களுக்கு சென்று சேராமல் ஒரு சிலரின் பாக்கெட்டில் லஞ்சமாக குவிகின்றது. 

Nov 13, 2011

தெருவெங்கும் வெள்ளம்! எங்கே மக்கள் அரசு?


வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டு நாள் மழை பிடித்தாலே நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. வேளச்சேரி போன்ற பகுதிகளில் படகுப் பயணம் செய்யுமளவிற்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகனபோக்குவரத்தே ஸ்தம்பித்துப் போய் விடுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வடிகால்களும், பாதாளச் சாக்கடைகளும் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
பல ஏரிகளும் குளங்களும், கால்வாய்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை. அப்படி பராமரிக்க ஒதுக்கப்படும் தொகையானது அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்தகாரர்களால் கூட்டு பிரித்து கொள்ளையடிக்கப்படுகிறது. நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன‌. அதைத் தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை. நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகின்றனர். 

Nov 12, 2011

வாச்சாத்தி - அதிகார வர்க்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்


வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்நாடக - தமிழக கூட்டு அதிரடிப்படையும், வனத்துறையும் சேர்ந்து மலை வாழ் கிரமா மக்களுக்கு இளைத்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வீரப்பன் பெயரை சொல்லிக்கொண்டு வனத்துறையினரே  சந்தனமரங்களை வெட்டி கடத்திக்கொண்டுருந்தனர்.அதற்கு அதிரடிப்படையும், வருவாய் அலுவலர்களும் துணைபோனார்கள்.

பெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளுக்கே!


இன்று (16.09.2011) பெட்ரோல் விலை உயர்வை ( தனியார் கம்பனி நிர்ணயம் செய்ததை) அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு சாதாரண மக்களுக்கு பேருடியாக அவர்களின் பட்ஜெட்டில் இறங்கியுள்ளது. தனியார் கார், பைக் கம்பனிகள்  அது துவங்குவதில் இருந்து குறைந்த விலையில்  நிலம், கச்சா பொருள் , குறைந்த கூலி, இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் மீறும் அதிகாரம், போலிஷ் பாதுகாப்பு, குறைந்த வட்டிக்கு லோன் ஆகிய அனைத்து சலுகைகளையும் வாரி வழங்குகிறது அரசு . 1  லட்சத்திற்கு கார் என அறிவித்து அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் தள்ளாடுகிறது. தவணை முறையில் கடன் கொடுத்து கண்ணுக்கு தெரியாமல் அதிக வட்டியை பைனான்ஸ் கம்பனிகள் பிடுங்குகின்றன. அரசும் பொது போக்குவரத்தை தன்னால் முடிந்த மட்டும் குறைத்து வருகிறது, கட்டணங்களை மறைமுகமாக ஏற்றி வருகிறது. 

ஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டும்

உலகிலையே அதிகம் ஊழல் செய்யும் நமது அரசியல்வாதிகளுக்கு, மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு ஒய் , இசட் , இசட் பிளஸ் பாதுகாப்பும் ,பற்றாக்குறைக்கு கருப்பு பூனைப்படை , குண்டு துளைக்காத வாகனகங்கள் ,தனி விமானங்கள்  என்று அவர்கள் ஊழல் செய்வதற்கு அனைத்து பாதுகாப்பையும் இந்த அரசுகள் செய்து கொடுக்கின்றன.அப்படியே ஊழல் , கொலை , நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைதானால்  கூட ஜெயிலிலும்  சொகுசு வாழ்க்கை , பாதுகாப்பு வளையங்கள் சூழவே வளம் வருகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணம் ,அதிகாரம் படைத்தவர்கள், சூழ்ச்சிகாரர்கள், காரியவாதிகள், சுரண்டல்வாதிகள். முதலாளிகள் , முதலாளிகளின் அடிவருடிகள்.

May 31, 2011

சமச்சீராகுமா கல்வி

தமிழக அரசின் கல்வி   முதலாளிகளுக்கு  ஆதரவான போக்கும் ,அரசு பள்ளிகளின்  அவல நிலையும்


கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அதுவும் தரமான கல்வியாக இருக்கவேண்டும், என்பது இன்றுள்ள அனைத்து பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும்.  தமிழகத்தில் அரசு பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும் ,  மெட்ரிக் பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும்  இருக்கிறது.  அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கடும் போட்டி நிலவும்  வேலைச்சந்தையில்  போட்டியிடக்கூடிய  எந்த வலுவும்  தர இயலாததாக அரசு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் இருக்கிறது  என்பது தான் இன்றுள்ள நிலைமை.

Apr 26, 2011

பெண் காவலர்களுக்கு யார் பாதுகாப்பு?சட்டம் ஒழுங்கை பாராமரிப்பது தான் காவல் துறையின்  வேலை. ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி மக்கள் பாதுகாப்பாக வாழவும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதுமே காவல் துறையின் தலையாய கடமை ஆகும். சட்டம் ஒழுங்கிற்கு  எங்காவது பாதிப்பு ஏற்படுகிறது என்றால் உடனடியாக பொது மக்கள் தொடர்பு கொள்ளும்படி மக்களின் நண்பர்களாக காவல் துறை இருக்க வேண்டும்.அவ்வாறு காவல் துறை பாரமரிக்கபடவேண்டியது ஒரு மக்கள் நல அரசின் தலையாய கடமை ஆகும் (welfare state ).
அப்படி திறமையாகவும் நேர்மையுடனும் காவல் துறை செயல்படுமானால் இங்கு தேவைக்கு மீறி ஆற்றில்  மணல் எடுப்பது, கனிம வளங்களை விதிகளை மீறி சுரண்டுவது, பொது சொத்துகளை ஆக்கிரமித்து கொள்வது, தொழிலாளர்  உரிமைகள் பறிக்கப்படுவது ,  பணத்திற்காக கொலை செய்வது , திருட்டு , கொள்ளை , பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை போன்ற அனைத்தும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு ஒரு நல்லாட்சி நடைபெறும் என்று உறுதியாக கூறலாம்.

Apr 22, 2011

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள்

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிற பிரபலமான திட்டம் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவித் திட்டம். திடீர் விபத்து, தீக்காயங்கள், பாம்புக்கடி, வெட்டு குத்து, மாரடைப்பு, தற்கொலை முயற்சி, பிரசவங்கள் இவற்றிற்கெல்லாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுகின்ற அபூர்வ திட்டம் "108" திட்டம். 

வசதி படைத்தாரே பயன்படுத்தி வந்த இந்த வசதியை பாமரர்களுக்கும் கிடைக்கச்செய்து ஏழை எளிய மக்களின் மனதிலும் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி இருக்கிற திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம்.

Mar 20, 2011

சேகுவேராவின் நண்பர் ஆல்பர்ட்டோ கிரெனாடோ மரணம் உழைக்கும் வர்க்கத்திற்கு மாபெரும் இழப்பு


உலகின் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்கமுடியாத ஆத்திரத்தால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!” என்று முழங்கிய    மாபெரும் போராளி எர்னஸ்ட் சேகுவேரா. கம்யூனிச சிந்தனையும் மனிதாபிமானமும் நிரம்பிய குடும்பத்தில் பிறத்தவர் சே .இவர்  1948 ஆம் ஆண்டில்  மருத்துவம் படிப்பதற்காக , புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு , அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன்  சேர்ந்து கொண்டு, மோட்டார்  சைக்கிளில்  தென்னமெரிக்கா  முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர்  குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் சைக்கில் நாட்குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

Mar 12, 2011

ஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும் -தொழிலாளர்களின் கையறுநிலையும்

இந்திய முதலாளித்துவ அரசில் தொழிலாளர் சட்டங்கள் என்று இருப்பவையும் அவை தொழிலாளர்களுக்கு வழங்கும் உரிமைகளும்  மிகவும் சொற்பம் என்றே சொல்லலாம். ஆல் போ  வளரும் வீட்டு வடாகையும், விண்ணை தாண்டி உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி உயர்வும் தொழிலாளர்களை சொல்லென்ன துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய தொழில் நிறுவனங்கள் ,தொழிலாளர் சட்டங்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை இந்த போக்கை ஆளும் முதலாளித்துவ  அரசும் , அந்த அரசின் நலனை பேணிக்காக்கும் நீதிமன்றங்களும் இவ்வாறு காலங்காலமாக தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, இந்த சுரண்டும் போக்கை கண்டும் , காணாதது போல தனது கண்களை இருக்க மூடிக்கொண்டுள்ளன.

Jan 26, 2011


இந்த 62- வது   குடியரசு தினத்தினை நாம் கொண்டாடா விட்டாலும் நம்மை ஆளும் வர்க்கமும் அவர்களின் ஊதுகுழலான  ஊடகங்களும்  கொண்டாடும் வேலையில் அதை முன்னிட்டு நமது தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25ம்  நாளை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த ஆறு மாத காலமாகவே தேர்தல் ஆணையம் "கண்ணியமான தேர்தல்" ,” ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது எப்படி", "வன்முறை அற்ற தேர்தல்களை நடத்துவது நமது கடமை" ,” ஓட்டப்பளிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு" என்று அரசு சார அமைப்புகளோடு இணைந்து கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. அத்தோடு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக நேர்மையான ஆணையர்களை நியமித்து தேர்தல் குறித்து ஒரு நல்ல கண்ணோட்டத்தை கொண்டு வர அயராது பல நிகழ்சிகளை நடத்தி உள்ளது. அதன் இறுதி வடிவமாக ஜனவரி 25 வது நாளை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து உள்ளது. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. னால் இது போல வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம்  எந்த பிரச்சாரத்தையும் செய்ததில்லை,  முதன் முதலில் ஏன் இவ்வாறு தேர்தல் ஆணையம் செய்கின்றது என்றால் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தி இந்தியாவின் புகழை நிலை நாட்ட வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம்.