எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Sep 8, 2010

திண்ணை பேச்சு வீரர்களிடம்

அடிமை ராச்சியத்தை எதிர்த்து கிளர்ந்து எழுந்தனர் மனிதர்கள் ஆம்,
அவர்கள் தாங்கள் மனிதர்கள் தாங்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற, எண்ணமே அவர்களை எழுப்பியது அதை வழிநடத்தினார் தோழர் ஸ்பாட்டகஸ், ஒற்றுமையின் வலிமையை புரிந்து கொண்டதால் வந்த வெற்றி தான், அடிமைகளின் எழுச்சி அது நமக்கு தருமே எப்போதும் புத்துணர்ச்சி!


மனிதர்களை கொடுஞ்சுரண்டலுக்கு ஆளாக்கிய பண்ணைஅடிமை தனத்தை, கொடுஞ்சுரண்டலை, எதிர்த்து கொதித்து எழுந்தனர் நம் பிரஞ்சு தோழர்கள், ஆக அங்கே அற்புதமாய் மலர்ந்தது பார் பாரி கம்யூன் எழுச்சி சில அற்ப, எண்ணம் கொண்டவர்களால் வீழ்ந்தாலும் நாம் நினைவில் நிறுத்தி பெருமை, கொள்ளும் விஷயம் அல்லவா நமது தோழர்களின் வெற்றி!



நம்மை பெருமை கொள்ள வைத்தது ரஷ்யா, அது எப்போதும் நமக்கு மெசியா, தொழிலாளி வர்க்கம், வர்க்க உணர்வு பெற்று வீறு கொண்டு எழுந்தது பார், அங்கே ஒற்றுமையை ஆயுதமாக்கி விழ்த்தியது பார் போற்ற விழுத்தியது சுரண்டி கொளுத்த முதலாளி வர்க்கத்தை, பார் முழுக்க பட்டொளி வீசி பறந்தது நமது பாட்டாளி வர்க்க கொடி!



பரந்த சீனம் விளித்தது பார், அங்கே மிகப்பெரிய அரை காலனி அரை, நிலப்பிரபுதுவத்தை எதிர்த்து கிளர்ந்தது பாட்டாளி வர்க்க ஜனநாயக எழுச்சி அத்தோடு நின்றதா நமது பாட்டாளி வர்க்கம், கலாச்சார புரட்சியும் செய்து சாதனை படைத்து வெற்றி கொடியை நாட்டியதே நமது வர்க்கம்!

நேபாள நாட்டிலே மன்னரும், ஏகாதிபத்தியமும் மக்களை ஆட்டி படைத்தனர், ஆடுகளை போல வதைத்தனர், அங்கே எழுந்தது மக்கள் எழுச்சி, புரட்டி போட்டது புதிய புரட்சி , நேபாளத்தில் உயரப் பறக்குது பார் செங்கொடி அது நேபாள் தோழர்களின் சிந்திய இரத்தத்தால் வந்த வெற்றி

முதலாளிகளின் கொடுஞ்சுரண்டலால் சுருண்டு கிடந்ததும் போதும், திண்ணை பேச்சு வீரர்களை நம்பியதும் போதும், அடிமை வாழ்க்கை வாழ்ந்ததும் போதும், இனி அடங்க மறுப்போம், பொருத்தது போதும் பொங்கி எழுவோம் , நமது உழைப்பை முதலாளிக்கு வழங்கியது போதும், இனி நமது உழைப்பை பாட்டாளி வர்க்கம், ஓன்று சேர கொஞ்சம் செலவழிப்போம் , நமது மூதாதையார் வியர்வையும், இரத்தமும் சிந்தித்தான் வெற்றி பெற்றனர். அந்த ராஜ பாட்டையிலே பாட்டாளி, வர்க்கப்புரட்சியை முழங்கிடுவோம், சமதர்ம சமுதாயம் அமைத்திடுவோம்!

No comments:

Post a Comment