எனது பக்கங்கள்


இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.Sep 9, 2010

அப்போது மிகுந்திருந்த இப்போது மலிந்த போன தமிழ் திரைபட பாடல்களில் முற்ப்போக்கு சிந்தனை

சுதந்திர போராட்டமும் தமிழ் சினிமாவும்

தமிழ் திரை பட உலகம் துவக்கம் என்பது சுதந்திர போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போதிருந்தே துவங்கி விட்டது எனலாம். பொதுவாகவே திரைபடங்கள் நாடகங்களில் இருந்தே வளர்ந்து வந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அதை போலவே தமிழ் திரைபட உலகிலும் நாடக கலைஞர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது என்று சொல்லலாம். பல புகழ் பெற்ற நாடக கலைஞர்களும் திரையில் தோன்றினர். அப்போது புராண நாடகங்கள் மட்டுமே அல்லாமல் சுதந்திர உணர்வை தூண்டக்கூடிய பல நாடங்கள் நடந்தன. அந்த நாடக கலைஞர்களில் பலர் சுதந்திர போராட்டங்களில் பங்கு பெற்றவர்கள் பலர் இருந்தனர் இது கலை துறையினருக்கு இயல்பான ஒன்றாக இருந்தது. ‘தியாக பூமி’ போன்ற படங்கள் முழுக்க முழுக்க சுதந்திர உணர்வை மக்களுக்கு ஊட்டுவனவாகவே இருந்தன. அதனால் தான் வெள்ளையர்கள் அரசாங்கம் நாடகத்திற்கும் தணிக்கை முறையை கொண்டு வந்தது அனால் இன்றும் அந்த தணிக்கை தொடர்வது என்பது வெள்ளையர்களுக்கும் ,இப்போது உள்ள கொள்ளையர்கள் அரசுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அந்த காலங்களில் நாடகம் நடந்து கொண்டிருக்கும் போதே வெள்ளை அரசாங்கத்திற்கு எதிராக நாடகம் நடத்தியதர்க்காக அந்த ராஜா வேஷத்தோடு கைதான பல நாடக கலைஞர்கள் இருந்தனர். அது இயல்பான ஒன்றாகவும் அப்போதைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் எளிதில் சுதந்திர உணர்வை ஊட்டுவனவாகவும் இருந்தது. அவ்வாறு கொடும் அடக்குமுறைகளை எதிர்த்து பாடுவது என்பது அந்த கலைஞர்கள் தங்களின் கடமை என்று கருதினர். அவர்களால் முடிந்த அளவிற்கு நாட்டின் சுதந்திரத்திர்க்கான பங்களிப்பை அவர்கள் ஆற்றினர். அத்தோடு பாரதியாரின் தடை செய்யப்பட்ட நூல்களை பதிப்பித்து வெளியிட்டனர் அந்த பாடல்களை மேடைகளிலும் பாடினர். இவ்வாறு தமிழகமெங்கும் சுதந்திர உணர்வு நிரம்பி ததும்பிய பொற்காலம் என்று சொல்லலாம்.

முற்போக்கு கருத்துகளை பேசிய தமிழ் கவிஞர்கள்

சுதந்திரத்திற்கு பிறகு அந்த போராட்ட பாரம்பரியத்தில் வந்த பாரதி தாசன், உடுமலை நாராயண கவி ,மருதகாசி போன்ற சமூக மாற்றத்திற்கு பாடுபட்ட பல கவிஞர்கள் தங்களின் திரை பட பாடல்கள் மூலம் மக்களுக்கு தங்களால் முடிந்த அளவிற்கு பாடல்கள் இயற்றினார். அந்த காலகட்டத்தில் கடவுள் மறுப்பு கொள்கை , அனைத்து மக்களும் பங்கு பெரும் குடியாட்சி , விதவை மறுமணம் , சாதி மறுப்பு , பணக்காரன் , ஏழை வேறுபாடு என்று பல கருத்துக்கள் அடங்கிய பாடல்களை புரட்சி கவிஞர் பாரதி தாசன் எழுதினார். அவரால் எழுதப்பட்ட பல தனி பாடல்கள் திரைப்படங்களின் சூழலுக்கு ஏற்றவாறு திரை பாடல்களாக சேர்த்தனர். உடுமலை நாராயண கவி சுதந்திர கீதம் மட்டுமின்றி பல சமூக சீர்திருத்த பாடல்களையும் இயற்றி உள்ளார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சில பாடல்களை அவர் எழுதியதோடு நாராயண கவியின் பாடல்களையும் தனது படங்களில் பயன் படுத்தி உள்ளார். மருத காசி என்ற புகழ் பெற்ற கவிஞர் தனது பாடல்கள் மூலம் விளிம்பு நிலை மனிதர்கள் படும் துன்பங்களை கவிதையாக சரம் தொடுத்தார். சந்திர பாபு என்ற நகைசுவை நடிகரும் தனது பாடல்கள் மூலம் மக்களுக்கு நன்மை தரும் கருத்துகளை எடுத்து வைத்தார்.

மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்ற கவிஞர் தான் பாரதிக்கு பிறகு சமூகம் மாற்றப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக எடுத்து வைத்த கவிஞர், இவர் சாதாரண மக்களோடு மக்களாக வாழ்ந்தவர், இவர் அடிப்படையில் விவசாயி ஆவர். இவரின் ஒவ்வொரு வரியும் இந்த சமூகம் மாற்றப்பட வேண்டும், உழைப்பவன் ஒருவன், சுகமாய் உண்டு வாழ்பவன் மற்றொருவன் என்ற நிலை அடியோடு மாற வேண்டும், என்று மக்களுக்காக பாடிய மக்கள் கலைஞன். உழைப்பவனுக்கு உரிய கூலி கொடுக்க வேண்டும் , தொழிலாளர்களுக்கு அவர்கள் ஒற்றுமை தான் பலம் , சமதர்ம சமுதாயம் தான் அனைத்திற்கும் தீர்வு, கூட்டு பண்ணை விவசாயம், பணக்காரன் செய்யும் கொடுமைகள் என்று வர்க்க உணர்வு கூர்மையாக வலிமை அடையும் படி தனது பாடல்கள் மூலம் மக்கள் முன் தெளிவாக எடுத்து வைத்தார். மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்ச ந்திரன் பாட்டாளி வர்க்கத்தோடு மிகவும் நெருங்கியவராக மிக முக்கியமான காரணம் நமது பட்டுக்கோட்டையார் ஆவர். எம்.ஜி.ஆர். வராது வந்த மாமணியாக பட்டுக்கொட்டையாரை கருதினார். தனது படத்தில் பட்டுக்கோட்டையார் பாடல்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால் தான் பட்டுக்கோட்டையார் இறந்த போது மிகவும் துடி துடித்து போனார் நமது மக்கள் திலகம்.

கண்ணதாசனில் துவக்கம்

கண்ணதாசன் ,வாலி போன்றவர்கள் அடிபடையில் பிற்போக்கு தன்மையும் தமிழ் வார்த்தைகளை இடம் மாற்றி போட்டு கவிதை சுவை சேர்க்க பாடல்கள் தந்தாலும் சாதரன மக்களின் கண்களில் கண்ணிற் வர பாட்டெழுதினாலும் அடிபடை உண்மையை அவர்கள் தங்கள் பிற்போக்கு தன்மை வாய்த்த மத கொள்கையை வைத்து மூடி மறைத்தனர் என்றே சொல்லலாம். கண்ணதாசன் வாழ்க்கையில் வரும் துண்பங்கள் பற்றி எழுதினாலும் அதில் இயலாமையும் , ஆற்றாமையும் தான் இருக்குமே தவிர அதில் ஏழைகளின் உண்மையான துன்பத்திற்கு காரணமான இந்த முதலாளித்துவம் பற்றி தொடாமலையே விட்டு விட்டனர்.

வைரமுத்து விதைத்த வார்த்தை விளையாட்டு

அவர்கள் பாரம்பரியத்தில் வந்த நமது இன்றைய கவிஞர்கள் அனைவரும் வார்த்தைகளை இடம் மாற்றி போட்டு விட்டு காம சுவையும் , வார்த்தை சாலங்களையும் அள்ளி தெளித்தனரே தவிர ( திராவிட கட்சிகள் தந்த உபயம் தான் ) இதன் மூலம் புதிது புதிதாக சொல்நயம் மிக்க பல வார்த்தைகள் கிடைத்தவனவே தவிர எந்த முற்போக்கு கருத்தும் மக்களுக்கு சென்று சேரவில்லை என்பது தான் உண்மை ஆகும். வைரமுத்து அதன் முன்னோடியாக கருதபடுகிறார் எந்த அர்த்தமும் இல்லாமல் பாட்டு எழுதுவது, இவருக்கு கை வந்த கலையாகும். அதோடு பட்டு எழுதிய நேரம் போக ஓய்வு நேரத்தில் இவர் கருணாநிதியை மேடை தோறும் புகழ்ந்து பேசுவது தான் இவர் தொழிலாகி போய் விட்டது, அதன் மூலம் பெரும் பணத்தை ஈட்டினார் இந்த கேடு கேட்ட கவிஞர். இவரின் அரிச்சுவடி பின்பற்றும் இன்றைய இளம் அரசவை கவிஞகர்கள் பலரும் கருணாநிதியை புகழ்ந்து பேசி பரிசு பெறுவது, மீதம் உள்ள நேரத்தில் வித விதமான வார்த்தை கோர்வைகளை பாடல்கள் என்ற பெயரில் உருவாக்குவது தான் இவர்களின் பணம் கொழிக்கும் தொழிலாக இன்று இருக்கிறது. முன்பெல்லாம் தமது கருத்துக்கள் மக்கள் மத்தியில் போய் சேர வேண்டும் என்ற அடங்கா ஆவலில் பாட்டெழுத வந்தனர். ஆனால் இப்போது பணம் கொழிக்கும் தொழில் இது என்றாகி போய் விட்டது.மக்களுக்கு அதற்க்கேற்றார் போல இன்றைய இசை அமைப்பாளர்களும் எதாவது இரண்டு வார்த்தையை மட்டுமே வைத்து முழு பாடலையும் அமைத்து விடுகின்றனர்.

மிதமிஞ்சி நிற்கும் வியாபார தனம்

இன்றைய படங்களில் ஒரு சில படங்களை தவிர மற்ற அனைத்து படங்களும் எந்தவித சமூக கருத்தையும் கொண்டிராமல் பணம் பண்ணும் வியாபார நோக்கோடு விரசமாக தான் தயாரிக்க படுகிறது. அறிவு மதி போன்ற சில கவிஞர்கள் சிறந்த பாடல்களை தந்தாலும் அவர்களால் முன்பிருந்த பட்டுக்கோட்டை ,மருத காசி அளவிற்கு பாடல்கள் தரமுடியாததிர்க்கு காரணம் அன்று இருந்த சூல்நிலையானது கலைஞகர்களுக்கு கொஞ்சமாவது மதிப் பளிக்கும் வகையில் மனித உணர்வும் ,நமது சமூகம் பற்றிய அக்கரையும் இருந்தது ஆனால் இன்று உள்ள சினிமா உலகம் முழுக்க முழுக்க வியபாரத் தனமும் , ஒரு கலாச்சார ஒழுக்க கெடும் நிறைந்ததாக காணபடுவது முற்போக்கு தன்மை என்பது மருந்துக்கு கூட இல்லாமல் அனைத்தையும் சந்தையில் விலை போகக்கூடியதாக மாயஜாலம் காட்டி வியாபாரம் செய்யும் கலையே இன்று வெற்றி பெற்ற சினிமா கலைஞர்களிடம் மிதமிஞ்சி காணப்படுகிறது. மனிதத்திற்கு மதிபளிக்கும் குணம் இன்று சினிமாவில் இருந்து தொலைத்து போய் விட்டது என்றே கூறலாம்.

நாம் முன்னெடுத்து செல்வோம்

மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமையை சாடும் முற்போக்கு சிந்தனை உள்ள பாடல்களை அவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது முட்டாள் தனமாகும். அதற்காக நாம் அப்படியே இந்த கொடுஞசுரண்டல் தொடர அனுமதிக்க முடியாது நமது சக்திக்கு உட்பட்டு சமயம் கிடைக்கும் போதெல்லாம் மக்கள் மத்தியில் முற்போக்கு கருத்துகளை கொண்டு செல்வது நமது கடமை என்பதை உணர்வோம். முற்போக்கு கருத்துகளை சமூகத்தில் எடுத்து வைத்த தமிழ் கவிஞகர்களை நினைவு கூறுவோம்.

No comments:

Post a Comment