எனது பக்கங்கள்


இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.Sep 25, 2010

ஏசு சொன்ன மீட்பர் மார்க்ஸ் தான்

மோசஸ் தான் முதலில் பத்து கட்டளைகளை மக்களுக்கு வழங்கினார் அவர் புரட்சிகர கருத்துகளை முதன் முதலில் முன் வைத்தார். அவர் வழியில் வந்த ஏசு இப்போது கடவுளின் சாம்ராட்சியத்தை முதன் முதலில் இந்த உலகில் நிறுவினார், என்று இப்போது சொல்லபட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் முற்போக்கானவராக  இருந்தார். கோயிலை வியாபார பொருளாக வைத்திருந்ததை வெளிப்படையாக எதிர்த்தார். அவர் சமயம் என்ற பெயரில் மக்களை சுரண்டபடுவதை எதிர்த்தார்.
மனிதர்களை மிருக சுரண்டலுக்கு உள்ளாக்கி வல்லவன் வகுத்ததே சட்டம்  என்று   இருந்த ஆட்சி முறையில்  மனித நேயம் என்பது என்ன வென்றே தெரியாத அந்த காலத்தில் அன்பை போதித்தார். அயலானை நேசிக்க சொன்னார். பெண்களை போகபொருளாக கருதும் போக்கை வண்மையாக கண்டித்தார். தனக்கு துன்பம் இளைத்தவனுக்கும் இவர் பதிலாக அவனுக்கு நன்மையே செய்ய சொன்னார். தான் அவமான படுத்தப்பட்டு சிலுவையில் அறைந்து கொள்ளப்பட்ட போது உங்களை மீட்டு கரை சேர்க்க மீண்டும் வருவேன் அப்போது புலோகமே சொர்க்கமாக மாறும் என்று சொன்னார். அவர் வராவிட்டாலும் இந்த பூலோகத்தை சொர்க்கமாக மாற்றக்கூடிய மந்திரகோலை நம் கையில் தந்தவர் உழைக்கும் வர்க்கத்தின் உன்னத தலைவர் தோழர் மார்க்ஸ் ஆவர்.

அவர்  தன் வாழ்  முழுவதும்  வறுமையில்  உழன்ற   போதும் நமக்கெல்லாம் சொர்கத்தை காட்டிய அந்த மாமனிதர் வறுமையில்  வாடி தன் பிள்ளைகளை வறுமைக்கு பலி கொடுத்தார் என்பது நமக்கு பாடமாக இருக்க வேண்டும். அந்த பாட்டாளி வர்க்கத்தின் பிதாமகன்  காட்டிய வழியே நாம் பின்பற்றி அனைத்து மக்களின் நன்மைகளுக்குமான ஒரு பாட்டாளி வர்கத்தின் ஆட்சியையும் முடிவில் சோசலிசத்தையும் அடைய வேண்டியது காலத்தின் கட்டாயத்தால் நிகழ வேண்டிய ஒன்றாகும். அவ்வாறு உருவானவர்கள் தான் லெனின் ,ஸ்டாலின் , மாவோ,பிடல் காஸ்ட்ரோ, செ குவாரோ ,மற்றும் பிரசந்தா  போன்ற மாபெரும் தலைவர்கள். இந்தியாவில் மார்க்சின் அசல் மாணவனாக தனக்கு துக்கு தண்டனை நிறைவேறும் போது மக்கள் கொதித்தெளுந்து ஒரு மாபெரும் புரட்சி மூலம் இங்கே கம்யூ னிசம் மலரும் என்று பாடுபட்டவர் தோழர் பாகத் சிங் ஆவர். நேபாளில் 12 ,000 தோழர்களின் உயிர் தியாகத்தால் கொடியவன் ஞனேந்திர தூக்கி  எரிய பட்டான். இவ்விதம் பலரின் தியாகத்தால் நடைபோடும் நமது பயணம் மிகப்பெரிய அளவில் நடை பெற்று கம்யூனிச அரசு அமையும் வரை ஓயப்போவதில்லை.

No comments:

Post a Comment