எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Nov 12, 2011

பெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளுக்கே!


இன்று (16.09.2011) பெட்ரோல் விலை உயர்வை ( தனியார் கம்பனி நிர்ணயம் செய்ததை) அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு சாதாரண மக்களுக்கு பேருடியாக அவர்களின் பட்ஜெட்டில் இறங்கியுள்ளது. தனியார் கார், பைக் கம்பனிகள்  அது துவங்குவதில் இருந்து குறைந்த விலையில்  நிலம், கச்சா பொருள் , குறைந்த கூலி, இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் மீறும் அதிகாரம், போலிஷ் பாதுகாப்பு, குறைந்த வட்டிக்கு லோன் ஆகிய அனைத்து சலுகைகளையும் வாரி வழங்குகிறது அரசு . 1  லட்சத்திற்கு கார் என அறிவித்து அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் தள்ளாடுகிறது. தவணை முறையில் கடன் கொடுத்து கண்ணுக்கு தெரியாமல் அதிக வட்டியை பைனான்ஸ் கம்பனிகள் பிடுங்குகின்றன. அரசும் பொது போக்குவரத்தை தன்னால் முடிந்த மட்டும் குறைத்து வருகிறது, கட்டணங்களை மறைமுகமாக ஏற்றி வருகிறது. 


முன்பாவது பெட்ரோல் விலையை அரசு நிர்ணயம் செய்து வந்தது  . பெட்ரோலியத்தின் கட்டுபாடு முழுவதும் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்ட பின்பு தற்போது  விலை உயர்வு என்பது மாதம் ஒரு முறை என்பது கட்டாயமாகி விட்டது .அதீத  லாபம் மட்டுமே தாரக மந்திரமாகவும், சுரண்டலும் , மோசடியும்  இரு கண்களாய்  கொண்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து நாம் எந்த விதமான நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஒட்டு போட மட்டுமே உரிமை கொண்ட இந்த முதலாளித்துவ ஜனநாயக நாட்டில் உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதே கடினமாக மாறி வருகிறது.

திட்டமிடாத உற்பத்தி , போட்டி பொருளாதாரம் , ஊக வாணிபம், கள்ள சந்தை , அதீத லாப நோக்கம் , கட்டுகடங்காத ஊழல், தொழிலாளர்கள் உரிமைகள் நசுக்கப்படுதல் போன்ற கட்டுமானங்களை  அடிப்படையாக கொண்ட இந்த முதலாளித்துவ நாட்டில் தொழிலாளர் இயங்கங்கள் வெகுண்டெலாத வரை  உழைக்கும் மக்கள் மீது இது போன்ற  பெட்ரோல் உயர்வும் ,அத்தியாவசிய பொருள்களின் உயர்வும் திணிக்கப்பட்டுக்கொண்டே தான்  இருக்கும்.

No comments:

Post a Comment