எனது பக்கங்கள்


இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.Nov 12, 2011

ஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டும்

உலகிலையே அதிகம் ஊழல் செய்யும் நமது அரசியல்வாதிகளுக்கு, மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு ஒய் , இசட் , இசட் பிளஸ் பாதுகாப்பும் ,பற்றாக்குறைக்கு கருப்பு பூனைப்படை , குண்டு துளைக்காத வாகனகங்கள் ,தனி விமானங்கள்  என்று அவர்கள் ஊழல் செய்வதற்கு அனைத்து பாதுகாப்பையும் இந்த அரசுகள் செய்து கொடுக்கின்றன.அப்படியே ஊழல் , கொலை , நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைதானால்  கூட ஜெயிலிலும்  சொகுசு வாழ்க்கை , பாதுகாப்பு வளையங்கள் சூழவே வளம் வருகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணம் ,அதிகாரம் படைத்தவர்கள், சூழ்ச்சிகாரர்கள், காரியவாதிகள், சுரண்டல்வாதிகள். முதலாளிகள் , முதலாளிகளின் அடிவருடிகள்.


ஆனால் சாதாரண  மக்களோ இருக்கும் வீடு எப்போது இடிந்து விழும் என்று தெரியாது, சாலையில்  தாறுமாறாக பறந்து வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், ஊழல் செய்து கட்டும் பொது பாலங்கள் , பள்ளிகள் , பொது இடங்கள் போன்றவைகள் இடிந்து விழுந்து இறந்து போவதும் , சட்டவிரோதமாக இயங்கும் ரவுடிகளால் ஏற்படும் மரணங்களும், போலிஷ் லாக் அப் மரணங்களும் , சட்ட விரோத சுரங்கங்களால் ஏற்படும் மரணங்களும், சிலரின் சுயநலன்களுக்காக துண்டிவிடப்பட்ட சாதி , மத கலவரங்களும், திடிரென்று பற்றி எரியும் குடிசை மரணங்களும், சரியான மருத்துவ வசதி செய்யாததால் ஏற்படும் மரணங்களும் , தொழிற்சாலையில்   விபத்தினால் ஏற்படும் மரணங்களும், சில பெரு முதலாளிகளின் சுரண்டலுக்காக ராணுவத்தை ஏவி விட்டு மலைவாழ் மக்களை கொன்று குவிக்கும் மரணங்களும்,  இங்கு சர்வ சாதாரண மானவை. ஏனெனில் இவர்கள் அனைவரும் சாதாரண ஏழை மக்கள்.  சிலரின் சுயநலனுக்காக இவர்களின் உயிரும் பறிக்கபடுகிறது. இவர்கள் உடல் மட்டுமல்ல உயிரும் சுரண்டலுக்கு உட்பட்டதே. இவர்களின் பாதுகாப்பிற்கு இங்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.

இது பத்தாதென்று பொது இடங்களான திறந்த வெளி சந்தை, கோவில் , ரயில்வே பாதை, ரயில்வே நிலையங்கள், பெரிய கட்டிடங்கள், நீதிமன்ற வளாகங்களில் யாரையோ நிர்பந்திக்க, யாரையோ பழிவாங்க திடீர் திடீர் என்று வெடிக்கும்  சக்தி வாய்ந்த குண்டுகளால் அப்பாவி மக்கள் உடல் சிதறி,  ரத்தம் சிந்தி சாகவும், பெரிய அளவில் உடல் உறுப்புகளை இழந்து வாழ் நாள் முழுவதும் துன்பத்தில் அழுந்தி சாகவும் , அதனால் பல குடும்பங்கள் தெருவுக்கு வருவதும் , ஏற்கனவே துன்பம் மிகுந்த சமூகத்தில் மேலும் துன்பத்தை சுமந்து எத்தனையோ   குடும்பங்கள் கண்ணீரோடு வாழ்கின்றன. இவர்கள் கொடுக்கும் பிச்சை காசுகள் அந்த கண்ணீரை எந்த விதத்திலும் துடைக்க முடியாது. இந்த பண பேய்களின் அரசியலுக்காக பலிகட ஆவது யார்? நாம் தானே ! ஏழை மக்கள் தானே!. பணம்படைத்தவர்களின் உயிர் தான் இந்த அரசாங்கத்திற்கு முக்கியம் , ஆனால் சாதாரண ஏழை மக்களின் உயிர்பாதுகாப்பிற்கு , உடமை பாதுகாப்பிற்கு இந்த ஆளும் முதலாளித்துவ அரசு எந்த விதமான பாதுகாப்பையும் செய்யாது. செய்வது போல பாவலா மட்டுமே காட்டும் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. ஊழல்வாதிகளுக்கும், பொறுக்கிகளுக்கும்   இசட் பிளஸ் பாதுகாப்பும்  , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டுமே  இங்கு பரிசாக கிடைக்கிறது.

No comments:

Post a Comment