எனது பக்கங்கள்






இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.



Sep 19, 2010

உயர் நீதிமன்றத்தில் தமிழுக்காக புது தில்லியில் வழக்கறிஞர்கள் போராட்டம்

கருணாநிதி -  தமிழர்கள் விரோதி

கருணாநிதி தன்னை எப்போதும் முத்தமிழ் காவலராகவே அடையாளப்படுத்தி கொள்ள விரும்புவார். அதற்கேற்றார் போல தமிழகத்திற்கு அறிவிக்கப்படாத அரசவை கவிஞர்களான வாலி , வைரமுத்து போன்றோரும் அவரை எப்போதும் இவர் ஒளிபதிவு கூட சுவர்களுக்குள் முடங்கி கிடந்த தமிழை இவர் தான் பாமரரும் பருகும் படி அனைவருக்கும் தமிழை தந்தவர் என்றும் தமிழை காக்க ,தமிழ் சமூகம் காப்பதுவும் தான் அவரின் தலையாய  பணி  என்று  போற்றி   புகழ்வார்கள். இவர்களின் பிடியில் இருந்து தமிழ் சமுதாயம் விடுபட திணறுவது என்பது தனிக்கதை. அது எவ்வளவு  துரம் மிகவும் தவாறான தகவல் என்பது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழர்   தன்  தாய் மொழியாம் தமிழை  உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக மாற்றக்கோரி அதுவும் சட்டமன்றத்திலே 2006 லையே தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அது நிலுவையில் இருக்கும் நிலையில் செம்மொழி மாநாட்டு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அது தான் தமிழை உயர் நீதி மன்ற வழக்கு மொழியாக அமர வைக்க சரியான நேரம் என்று தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழியாக்கும் வரை சாகும் வரை உண்ணா  விரதம் இருந்தனர் தமிழை வழக்கு மொழியாக்குவதில் உறுதியான நிலைபாடு உள்ளவராக இருந்திருந்தால் உடனடியாக இது போல் தமிழகத்தில் நெருக்கடி நிலை உருவாகி உள்ளது உடனடியாக குடியரசு தலைவர் இதில் தலையிட்டு இந்த சட்ட அங்கீகாரத்தில் கையெழுத்திட்டால் இன்று வழக்கறிஞர்கள்  திரும்பவும் போராட நேர்ந்து இருக்காது.
கிளர்ந்தெழுந்த மதுரை வழக்கறிஞர்கள்
வழக்கறிஞர்கள்  உண்ணாவிரத்தை தொடர்ந்து  மதுரை வழக்கறிஞர்கள் தொடர் நீதி மன்ற புறக்கணிப்பில் இறங்கினர் , அத்தோடு போராட்டம் பல வடிவங்களை எடுத்தது , தமிழ் அமைப்புகள் தொடர் வண்டி மறியல் செய்தனர் , வழக்கறிஞர்கள் சாலை மறியல் மற்றும் கண்டன கூட்டங்கள் போடுவதும், அரசியல் கட்சிகளின் ஆதரவை திரட்டுவதும் அந்த உண்ணாவிரத போராட்டத்தை செழுமைப்படுத்த அனைத்து ஆக்கப்பூர்வமான வேலைகளிலும் இறங்கினர். மதுரையில் ஆரம்பித்த வழக்கறிஞர்கள் போராட்டம் தமிழகம் எங்கும் பரவியது. அனைத்து நீதிமன்றகளிலும் நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்  ஈடுபட்டனர் கோவையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர் , கடைசியாக சென்னையில் உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை  கால வரம்பற்ற உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர். அது வரை ஊடங்கங்களில் செய்தி வராமல் பார்த்து கொண்ட தமிழக அரசு சென்னையில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்கியவுடன் அனைத்து போராடங்களையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும்  சிறை சென்றும் வழக்கறிஞர்கள் உன்னவிரதப்போராட்டம் தொடர்ந்தது. ஆனாலும்  வெளியில் இருந்த வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர், அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழில் வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு  அனுமதி அளித்தார். இந்த வாய் மொழி உத்தரவு முழுமையான வெற்றி அல்ல என்றாலும் உண்ணாவிரதம் இருந்துவரும் வழக்கறிஞர்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

நீதிமன்றங்கள் மக்களுக்கானவை
நீதி மன்றம் என்பது அனைத்து முயற்சிகளும் கை விட்டுப்போய் இறுதியாக  மக்கள் நம்பிக்கையுடன் வரும் இடம் ஆகும். ஆனால்  நீதி மன்ற நடைமுறைகள்  இன்றும்  கூட ஆங்கிலத்தில் இருப்பது நீதி மன்றங்கள் மக்களுக்கானதாக இல்லாமல் இருப்பது  நம்மை போன்றவர்களுக்கு நெஞ்சை உறுத்தும் உண்மை ஆகும். ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஆட்சி நிர்வாகம் , மற்றும் நீதிமன்றகளில் ஆங்கிலத்தை நடைமுறை மொழியாக வைத்திருந்தனர். அதே நடை முறை சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனா பின்பும் தொடர்வது என்பது நமது மொழிக்கு அதை பயன்படுத்தி வரும் மக்களுக்கு இளைக்கும் துரோகம் ஆகும். சில சாதாரண சிறு வழக்குகளை மக்களே எளிதில் தாக்கல் செய்ய முடியும் வகையில் எளிதாக இருக்கும். ஆனால் நீதிமன்ற மொழி ஆங்கிலமாக இருப்பதால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பல பொது நல வழக்குகள் தாக்கல் செய்யமுடியாமல் போனதற்கும், தங்கள் வழக்கில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போனதற்கும் மொழிப்பிரச்சனை மிக முக்கியமானது ஆகும். கீழ்நிலை  நீதி மன்றங்களில் தமிழில் வாதடமுடியும் என்ற போதும் நடைமுறையில் ஆங்கிலமே அங்கேயும் ஆட்சி செலுத்துகிறது. நீதி மன்றங்கள் எப்போதும் மக்கள் எளிதில் நாட முடிந்ததாக இருக்க வேண்டும் , சாதாரண  உழைக்கும் மக்கள் அரசாலும் , அண்டைகளாலும் , அயோக்கியர்களாலும் பாதிக்கப்படும்   போது கடைசி கடைசியாக பொய் நிற்பது நீதிமன்றங்களில் தான்.  அந்த நீதிமன்ற  நடைமுறைகள் மிகவும் சிக்கலானதாகவும் , செலவு மிகுந்ததாகவும் , கால விரயமாக கூடியதாகவும் இருக்கிறது. அத்தனைக்கும் காரணம் வழக்கறிஞர்களோ, நீதிபதிகளோ  அல்ல. நமக்கு சட்டங்களை இயற்றி வைத்துள்ள நாடளமன்றமும் ,சட்டமன்றமும், இதை ஆட்டிவிக்கும் நமது ஆட்சியாளர்களும் தான்.
ஒரு கண்ணில் மட்டும் சுண்ணாம்பு
 உத்தரபிரதேசம் , பீகார் ,மத்தியபிரதேசம் ,ராஜஸ்தான், போன்ற   மாநிலங்களில் அந்த மாநில மொழியான ஹிந்தியே நீதிமன்ற நடைமுறை மொழியாக உள்ளது. மேற்கு வங்காள மாநில அரசு அந்த மாநில மொழியான வங்காள மொழியை நீதிமன்ற மொழியாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சட்ட மன்றத்திலே சட்டம் இயற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த போது மத்திய அரசு ஏதேசதிகாரமாக அந்த சட்ட வரைவை நிராகரித்தது. இது இந்திய அரசிலமைப்புக்கு விரோதமான நடவடிக்கை ஆகும், அத்தோடு இந்திய அரசின் கூட்டாச்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பதாகும். நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் நீதி மன்ற மொழி குறித்த அதிகாரம் அந்த மாநில சட்டமன்றதிர்க்கே கொடுக்கப்பட்டு உள்ளது. அதை அங்கீகரிக்கும் உரிமை மட்டுமே மத்திய அரசின் கைவசம் உள்ளது அந்த உரிமையை  முறைகேடாக பயன் படுத்தி மக்கள் உரிமையை பறிக்க பார்க்கிறது இ து  உழைக்கும் மக்களுக்கு எப்போதும் விரோதமாக இருக்கும்.
மன்மோகன் எப்போதும் ஏழைமக்களுக்கு துரோகி தான்
நமது பாரத பிரதமர் மன்மோகன் சிங் எப்போதும் ,எந்த நேரமும் பணம் படைத்தவர்களை பற்றியே சிந்திப்பவர் , முகேஷ் ,அணில் அம்பானி தகராறை முன் நின்று தீர்த்து வைப்பார்  , முதலாளிகள் வலியுருத்தியதர்க்காக அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் , இப்போது மக்கள் செத்தாலும் ,சுற்று சுழல் நாசமாக போனளாலும் பரவ இல்லை ஆனால் எக்காரணம் கொண்டும் முதலாளிகளுக்கு நஷ்டம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதாவை கொண்டு வந்தவர், பழங்குடி மக்கள்   செத்தாலும் பரவாயில்லை , வனமே அழிந்து நாசமாக சுற்றுசுழல் நாசமானாலும் பரவாயில்லை ஆனால் வேதாந்தாவின் லாபம் குறைத்தால் மன்மொகனுக்கு  காய்ச்சல்  வந்துவிடும் , இவருக்கு யார் டாக்டர் பட்டம் கொடுத்தது என்று தெரியவில்லை இவர் ஏழைகளுக்கு என்றைக்குமே நோய் தரக்கூடிய வைரஸ் தான்.  
தில்லியில் ஒலித்த தமிழுக்கான முழக்கம்
தமிழகத்தில் மட்டுமே தமிழை நீதிமன்ற மொழியாக்க கோரவில்லை ,அந்தந்த மாநில மொழியை அந்தந்த மாநில நீதிமன்றகளில் ஆட்சிமொழியாக   ஆக்க வேண்டும் என்பது தான் வழக்கறிஞர்களின் கோரிக்கை ஆகும். அந்த கோரிக்கையை  வலியுறுத்தி தான் உண்ணாவிரத்தை தொடங்கினர் அதன் மூலம் நீதி மன்றகளில் தமிழில் வாதிடலாம் என்ற வாய் மொழி உத்தரவு இருந்த போதும், அதை சட்டமாக்காமல் மதிய அரசு தான் காலம் தாழ்த்தி வருகிறது அதை கண்டித்து எங்கு போய் போராட்டம் நடத்தினால் இவர்களின் கேளாத செவிகள் கேட்க்குமோ அங்கு போய் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து வழக்கறிஞர்கள் புது தில்லியில் சென்று அனைத்து நாடாளமன்ற உறுப்பினர்களையும்  சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர் அதன் விளைவாக அன்றைய தினம் நாடளமன்றத்தில் ஆகஸ்ட் 25 அன்று பூச்சிய நேரத்தில் பேசிய டி. ராஜா எம்.பி வழக்கறிஞர்கள் இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர் அவர்கள் கோரிக்கை நியாயமானது  என்று பேசினார். வழக்கறிஞர்கள் புதுதில்லியில் உள்ள அனைத்து மாநில எம்.பிக்களையும் பார்த்து தங்களது  கோரிக்கை மனுவினை அளித்தனர். அத்தோடு உச்ச நீதிமன்றத்திற்கு  சென்று அங்குள்ள பல மூத்த வழக்கறிஞர்களை பார்த்து தங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிய வைத்தனர்.  அவர்களும் இது அரசியலமைப்பு  சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைக்கான  சரத்தான 14 வழங்கும் சமமானவர்களுக்கிடையே சமத்துவம் என்ற முதன்மையான அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று கருத்து தெரிவித்தனர்.

நமது கடமை
மத்திய அரசின் இந்த போக்கானது இந்திய அரசியல் அமைப்பு சட்ட உறுப்பு 19(1)(g) மற்றும் 348(2)   ஆகியவற்றிக்கு எதிராக மத்திய அரசு ஒரு சார்ப்பாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது ஆகும். மத்திய அரசு உடனடியாக தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளுக்கும் அந்தந்த மாநில நீதிமன்ற மொழியாக ஆக்க உடன்பட வேண்டும் இல்லாவிட்டால் இது தமிழகத்தில் மட்டும் அல்லாது அனைத்து மாநிலங்களிலும் மிகப்பெரிய போராட்டமாக கிளர்ந்து எழும் என்பது உண்மை. தமிழகத்தில் தொடக்கி உள்ள மொழி உரிமைக்கான போராட்டம் இந்தியாவெங்கும் பரவி வெற்றியை பெற நாம் பாடுபட வேண்டியது நமது வரலாற்று மொழி கடமை ஆகும்

No comments:

Post a Comment