எனது பக்கங்கள்


இந்த அரசும் , அரசியலும் ஒரு சார்பாகவே பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது ஆனால் பெரும் எண்ணிக்கையில் உள்ளவர்கள் இங்கு ஏழைகளே. அவர்களின் பலமே ஒற்றுமை தான் அந்த ஒற்றுமையை சாதி ,மதம் ,மொழி, போன்றவை துண்டாட பார்க்கின்றன. நாம் அனைவரும் பாட்டாளி வர்க்கம் என்று ஓன்று படுவோம். நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து போராடுவோம்.Oct 15, 2010

அரிமா அரிமா இந்த தமிழன் பாவம் அரிமா

பட்டுக்கோட்டை கல்யாண  சுந்தரம் , மருதகாசி போன்ற தமிழ்  கவிஞர்கள் மக்களுக்காக பாடினார்கள், இந்த சமூகம் நல்ல பாதையில் நடைபயில வேண்டும், என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏழை மக்களுக்கும் புரியும் வகையில் மெட்டமைத்து அவர்கள் படும் துன்பங்களை எடுத்துரைத்தனர். இவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர்கள் குரல் திரைவானில் ஒலித்தது.
ஆனால் இன்று மருந்துக்கு கூட கவிஞர்கள் ஏழை மக்களை பற்றியோ அவர்கள் படும் துன்பங்களை பற்றியோ எழுதுவதில்லை. அதற்கு  காரணமாக இவர்கள் மொழிவது என்னவென்றால் அன்று பட்டுகோட்டையாருக்கு எம்.ஜி.ர்.  போன்றோர் ஆதரவு கொடுத்தனர். இன்று கலாநிதியும் , உதயநிதியும் , தயாநிதியும் மும்மூர்த்திகளாக விளங்கும் சினிமாக்களத்தில் துதி பாடி பிழைப்பதை தவிர வேறு வழி இல்லை என்று இவர்கள் நியாயம் சொன்னாலும் அந்த வாதம்  பொய்யானதாகவே    இருக்கும்  என்பது தான் உண்மை ஆகும். இன்றும் நல்ல சினிமாவை எடுக்க தமிழ் சினிமாவில் ஆள் இருக்க தான் செய்கின்றனர்  நண்பர்  சசிகுமார்  ,  ஜனநாதான்  , சமுத்திரகனி, மணிரத்தினம் , கற்றது தமிழ் ராம்  போன்ற தமிழ் சினமா இயக்குனர்கள் உலக  சினமா  தரத்திற்கு படங்களை எடுக்கின்றனர் . ஆனால் அவர்கள் எடுக்கும் நல்ல படங்களுக்கு கூட நல்ல பாடல்களை எழுதி ஏழைமக்கள் படும் துன்பங்களை மக்கள் முன்பு நிறுத்த இன்று யாரும் இல்லை என்பது மிகவும் வருத்தமான பதிலாக தான் இருக்கும். இந்த நிலை ஏன் வந்தது ஏழை மக்கள் படும் துன்பங்களை பற்றி திரைப்படத்தில் மட்டுமல்ல கவிதை எழுத கூட இன்று ஆள் இல்லாத நிலை ஏன் நண்பர்களே ? இதை நாம் மிக முக்கியாமான விவாத பொருளாக எடுத்துகொண்டு விவாதிக்க வேண்டும். குடும்பம், வேலை, சமூகம் , அரசியல், கலை  எல்லாம் தனி தனியானதல்ல அவ்வாறு தான் நம்மை பலர் குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடித்து கொண்டு உள்ளனர். இது அனைத்துமே ஒரு ஒரு சக்த்திற்குள்  கொண்டு வரவேண்டிய விஷயங்கள்.

1 comment: